Wednesday, March 4, 2009

பத்ம பூஷன் விருது!

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷன் விருது , அரசு வழங்கியிருப்பதைக் கேட்டவுடன் என்னுடைய தமிழ் ஆசிரியர் தான் நினைவுக்கு வந்தார். அவர் வகுப்பில் ஏதாவது ஒரு மாணவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார். அவன் சரியாக பதில் சொன்னதும் "சில சமயங்களில் இவன் சரியாக பதில் சொல்கிறான், அல்லவா" என்று சொல்வார். முன் பெஞ்சி மாணவர்கள் சிரிப்போம். ஏன் அவர்கள் சிரித்தார்கள் என்று அடுத்த கேள்வி கேட்பார். ஏதாவது ஒரு மாணவன் எழுந்து "பல சமயங்களில் அவன் சரியாக பதில் சொல்லமாட்டான் என்பது பொருள், ஐயா" என்று சொல்வான்.
எழுத்தாளர் என்ற சொல்லுக்கு ஒரு உருவம் வரையச் சொன்னால் நான் ஜெயகாந்தன் படத்தை தான் வரைவேன். அவருடைய எழுத்துக்கள் படித்து அந்த உணர்ச்சியிலேயே இரண்டு நாள் மூன்று நாள் நான் இருந்திருக்கிறேன். அரசு சில சமயம் பொருத்தமாக விருது வழங்குகிறது அல்லவா!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home