ஜோஸ்யம்..
ஒரு நாளைக்கு 24 மணி நேரம். 12 ராசி பெட்டிகள் உள்ளன. பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ராசி. பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் உதயம் ஆகிக் கொண்டு இருக்கிறதோ அந்த ராசி லக்னம். அந்த நட்சத்திர பாதத்தின் அம்சம் அம்சா லக்னம். அடுத்தது 12 ராசிக்கும் குணங்கள் லக்னத்திற்கும் குணங்கள். நட்சத்திரத்துக்கும் பொதுவான குணங்கள். அடுத்தது கிரகங்கள். அதற்கு குணங்கள் பலன்கள். பார்வை. இடம். ஸ்தானம். காரகம். இப்படி போகிறது. என்ன சொல்ல வருகிறது ஜோஸ்ய சாஸ்த்ரம் என்று ஒரு மாதிரியாக புரிய வரும். பிறகு அவரை இன்னொரு சந்தேகம் கேட்டேன். கிரகங்கள் சுற்றுகின்றன. உண்மை. மனிதனுக்கு கஷ்டங்கள் சுகங்கள் மாறி மாறி வருகின்றன. உண்மை. ஆனால் கிரகங்கள் சுற்றுவதால் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி. எனவே அவ்வளவும் பொய்யா. நிரம்ப கஷ்டங்கள் எடுத்துக்கொண்டு பல பேரிடம் பல நாள் ஆராய்ச்சி செய்து தான் ஜோஸ்ய சாஸ்திரம் தயாரிக்கப் பட்டு உள்ளது. உண்மையில் கணக்கு போட்டு பார்த்தால் 40% கெடுதல். ௨0% சாதாரணம்.20% நல்லது.
மனிதனுக்கு ஒரு ஆறுதல் தருகிறது. பங்காளியிடமோ பக்கத்து வீட்டுக்காரநிடமோ சண்டைக்கு போகாமல் இருக்க செய்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. கடவுள் மீது நம்பிக்கையும் பக்தியும் வளர்க்கிறது.
1 Comments:
joshyam,supera irukku sir,keep it up,nereya purigiradhu
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home