Friday, July 31, 2009

ஜோஸ்யம்..

வேறு சிலர் நியுமராலஜி, நேமாலஜி என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள். நமது பாரத நாட்டில் தான் முதலில் பூஜ்யம் கண்டு பிடிக்கப்பட்டது. பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் ஐரோப்பிய நாடுகளில் அது பயன் படுத்தப்பட்டது. அதனால் அவர்கள் ௨000-ஆவது ஆண்டை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு துவக்கம் என்று சொல்கிறார்கள். நமது நாட்டில் 0 முதல் 9 வரை அனைத்திற்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. கெட்ட எண் துரதிர்ஷ்டம் பிடித்த எண் என்று எதுவும் கிடையாது. என்னும் எழுதும் கண் எனத் தகும் என்பது நமது நாட்டு பழமொழி. ஆங்கில எழுத்துக்கு ஒரு இலக்கம் கொடுத்து பிறகு அதனை வலமிருந்து இடமாக கூடுகிறார்கள். அதாவது 438 என்று வந்தால் 4+3+8 என்று கூட்டி வரும் 15 -ஐயும் கூட்டி ஆறு என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி கூட்டவேண்டும் என்றால் சரியான பதில் கூற மாட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் 13 கெட்ட எண் என்றும் அந்த எண் கொண்ட வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகள் அந்த தேதியில் நடந்த கெட்டதுகள் அந்த மணி நிமிடத்தில் நடந்தவை என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்கள். ஆராய்ந்து paarthaal எல்லா எண் களுக்குமே அது போல சொல்ல இயலும்.

அதை விட அறிவுக்கு சற்றும் பொருந்தாது நேமாலஜி. பெயரில் உள்ள எழுத்துக்களை இப்படி அப்படி மாற்றச் சொல்லி அதற்கு பணம் வாங்குகிறார்கள்.

இவைகளைஎல்லாம் நம்பி ஒரு பயனும் கிடையாது.

Thursday, July 23, 2009

ஜோஸ்யம்..

ஆனால் அதையே நம்பிக் கொண்டு வீணாக பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வது தவறு. உலகத்தில் உள்ள அனைத்து சாஸ்த்ரங்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியான குனாம்சங்களையே அந்தந்த ராசிகளுக்கு சொல்கின்றன.

Sunday, July 19, 2009

ஜோஸ்யம்..

ஒரு நாளைக்கு 24 மணி நேரம். 12 ராசி பெட்டிகள் உள்ளன. பிறந்த நேரத்தில் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ராசி. பிறந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் உதயம் ஆகிக் கொண்டு இருக்கிறதோ அந்த ராசி லக்னம். அந்த நட்சத்திர பாதத்தின் அம்சம் அம்சா லக்னம். அடுத்தது 12 ராசிக்கும் குணங்கள் லக்னத்திற்கும் குணங்கள். நட்சத்திரத்துக்கும் பொதுவான குணங்கள். அடுத்தது கிரகங்கள். அதற்கு குணங்கள் பலன்கள். பார்வை. இடம். ஸ்தானம். காரகம். இப்படி போகிறது. என்ன சொல்ல வருகிறது ஜோஸ்ய சாஸ்த்ரம் என்று ஒரு மாதிரியாக புரிய வரும். பிறகு அவரை இன்னொரு சந்தேகம் கேட்டேன். கிரகங்கள் சுற்றுகின்றன. உண்மை. மனிதனுக்கு கஷ்டங்கள் சுகங்கள் மாறி மாறி வருகின்றன. உண்மை. ஆனால் கிரகங்கள் சுற்றுவதால் தான் என்பதற்கு என்ன அத்தாட்சி. எனவே அவ்வளவும் பொய்யா. நிரம்ப கஷ்டங்கள் எடுத்துக்கொண்டு பல பேரிடம் பல நாள் ஆராய்ச்சி செய்து தான் ஜோஸ்ய சாஸ்திரம் தயாரிக்கப் பட்டு உள்ளது. உண்மையில் கணக்கு போட்டு பார்த்தால் 40% கெடுதல். ௨0% சாதாரணம்.20% நல்லது.
மனிதனுக்கு ஒரு ஆறுதல் தருகிறது. பங்காளியிடமோ பக்கத்து வீட்டுக்காரநிடமோ சண்டைக்கு போகாமல் இருக்க செய்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. கடவுள் மீது நம்பிக்கையும் பக்தியும் வளர்க்கிறது.

Saturday, July 18, 2009

ஜோஸ்யம், ஜாதகம்!

என்னுடைய அப்பா அமெச்சூர் ஜோஸ்யர். சித்தப்பாவும் அதே போல. அப்பா, நான் சின்ன பையனாக இருக்கும் போதே காலமாகி விட்டார். சித்தப்பாவோடு சில நாட்கள் தங்கி இருக்கும்போது ஜோஸ்ய சாஸ்திரம் பற்றி கேட்டேன். அவர் பாம்பு பஞ்சாங்கத்தை நன்றாக படி. சந்தேகம் வந்தால் என்னைக் கேள் என்று சொன்னார். நான்கு நாட்கள் அதே வேலையாக அதை படித்தேன். அ) பூமியை சூரியன் சுற்றுவதாக இருக்கிறது. ஆ) நட்சத்திரத்துக்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம் ஆனபூமியின் உப கிரகமான சந்திரனுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும். இந்த இரண்டு கேள்விக்கு மட்டும் சயின்ஸை தூர வைத்துவிட்டு மற்ற கணக்குகளை பார் என்று சொன்னார்.